• May 20 2024

அட்டகத்தி தினேஷின் J பேபி திரைப்பட டீசரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஊர்வசி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் “அட்டகத்தி” என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக வலம் வந்தவர் தான் பா.ரஞ்சித். இவர் இதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். பின்பு ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கினார்.

அத்தோடு நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் நீலம் புரொடக்‌ஷன் அடுத்து தயாரிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு J பேபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. முக்கியமாக டீசரில் ஊர்வசி சம்மந்தப்பட்ட காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement