• Sep 20 2024

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த த்ரிஷா- அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ- செம கியூட்டாக இருக்கிறாங்களே

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி லியோ படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் நா ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் இன்று மாலை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ஒரே நாளில் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.ஒருபக்கம் விஜய் பிறந்தநாளுக்கு லியோ படக்குழு ட்ரீட் வைத்துக்கொண்டிருக்க மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுவருகின்றன.


இப்படியான நிலையில் விஜய்க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் த்ரிஷா லியோ பட ஷுட்டிங்கில் எடுத்த புகைப்படததை பதிவிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கில்லி படத்தில் பார்த்த மாதிரியே இருக்கிறீங்களே எனக் கூறி வருகின்றனர். மேலும் லியோ படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement