அடிக்கொரு புதுமைகள் அறிமுகமாகிக் கொண்டிருந்த 90களின் ஆரம்பத்தில் தமிழ் திரையிசை பாடல்கள் இளைஞர்களுக்கு பழையது போலவே இருக்க 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "ரோஜா" திரைப்படம் தமிழ் திரைத்துறைக்கு ஓர் இசையமைப்பாளரை அறிமுகம் செய்தது.
வெளியான முதல் படத்தின் பாடல்களே ஏ.ஆர்.ரகுமான் என்ற பெயரை மனதில் பதியவைக்க உதவியது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் அன்றைய இசையரசன் இளையராஜாவுக்கே போட்டி என்று பத்திரிகைகள் எழுதின.அது அன்று தொட்டு இன்றுவரை பத்திரிகைகளின் பெரும் தலைப்பாகவே இருந்து வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த முதல் திரைப்படமான "ரோஜா" வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் தமிழில் இருக்கும் ஓர் ஆஸ்கர் நாயகனாக மிளிர்கிறார்.இன்று இந்தியா தாண்டி உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் #32YearsOfARRahman என்ற ஹாஸ்டக்கினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!