எத்தனையோ புராண கதைகளில் நடித்திருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் என்றும் நிலையான மற்றும் முதன்மையாக கருதப்படும் புராணப்படமான "திருவிளையாடல்" வெளியாகி இன்றுடன் 59 ஆண்டுகள் நிறைவாகிறது.
ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் முன்னணி கதாபத்திரங்களில் சிவாஜிகணேசன்,சாவித்திரி, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோர் நடித்திருக்க டி.எஸ்.பாலையா ,ஆர்.முத்துராமன் ,நாகேஷ் , டி.ஆர்.மகாலிங்கம் ,கே.சாரங்கபாணி ,தேவிகா மற்றும் மனோரமா ஆகியோர் சிறு காட்சிகளில் தோன்றினாலும் படத்தின் கதாபத்திரங்கள் அனைத்தும் ரசிக்கக் கூடிய வகையில் அமைத்திருக்கும்.
புராண கதைகளில் தெரிந்தெடுத்த 4 கதைகளை ஒன்றாக்கி இரண்டரை மணிநேரத்தில் ஒரு காவியத்தை உருவாக்கி கொடுத்தது "திருவிளையாடல்" படக்குழு.நக்கீரர் மற்றும் தருமி கதை, பராசக்தியின் தாக்ஷாயணி தோற்றம், மீனவப் பெண்ணாக பிறந்த பார்வதி மற்றும் பாணபத்திரர் கதை என நீளும் படம் எவ்விடத்திலும் தொய்வில்லாது ஒரு திரைக்காவியமாகவே வெளிவந்தது.
1965 ஜூலை 31 இல் வெளியான "திருவிளையாடல்" திரைப்படம் வணிக ரீதியாக வென்று வெள்ளிவிழா திரைப்படமாக அறிவிக்கப்பட்டது.மீண்டும் 2012 ஆண்டு செப்டம்பரில் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டு மீண்டும் வணிக ரீதியாக வெற்றிபெற்றது.
Listen News!