• Mar 31 2025

அப்பாவின் பெயரில் வெளியாகிய அதர்வா பட Title Teaser..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் காதல் கதை மையமாக உருவாகும் புதிய திரைப்படத்தின் Title Teaser தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப் படத்தில் அதர்வா, ப்ரீத்தி, கயாடு,நட்டி நட்ராஜ் மற்றும் நிஹாரிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


Dawn Pictures தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு S. தமன் இசையமைத்துள்ளார் மற்றும் படத்தின் பாடல்களையும் இசையையும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். படத்தின் கதை இசை மற்றும் நடிகர்களின் குரல்கள் இணைந்து மாறுபட்ட உலகத்தில் ஒரு அழகான காதல் கதை உருவாக்கியிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.


இப் படத்திற்கு "இதயம் முரளி " என அவரது அப்பாவின் பெயரினை வைத்துள்ளனர்.இந்த Title Teaser தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில்  "இந்த உலகத்திலேயே best lover ரோமியோவோ மஜுனுவோ அம்பிகாபதியோ இல்லை அந்த டைட்டானிக் ஜாக்கோ இல்லைடா இதயம் முரளிதாண்டா" என குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

Advertisement

Advertisement