• Nov 06 2024

’தக்லைஃப்’ சண்டை காட்சியின் போது விபத்து.. பிரபல நடிகருக்கு எலும்பு முறிந்ததா?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பின் போது பிரபல நடிகர் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரும் ’நாயகன்’ படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பின்னர் இணைந்த திரைப்படம் ’தக்லைஃப்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னை, டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சென்னையில் தற்போது ஒரு முக்கிய சண்டை காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இந்த சண்டை காட்சியில் கமல்ஹாசன் மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்ட ஸ்டன்ட் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் ஜோஜு ஜார்ஜ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஹெலிகாப்டரில் இருந்து குதிக்க வேண்டிய காட்சியில் அவர் ரிஸ்க் எடுத்து தானே குதித்ததாகவும் அப்போது சரியான இடத்தில் குதிக்காததால் அவருக்கு விபத்து ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவருடைய காலில் உள்ள எலும்பு முறிந்து உள்ளதை அடுத்து அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் காயத்தில் இருந்து மீண்டு வர இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகும் என்பதால் அதுவரை மற்ற காட்சிகளின் படப்பிடிப்பை நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement