• May 21 2024

விக்ரம் படம் இதனால் தான் வெற்றி பெற்றது- உண்மையை வெளிப்படையாகக் கூறிய கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்து கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் எனலாம். இப்படம் வெளியாகிய நாளிலிருந்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வருவதால் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் பேசிய லோகேஷ் கனகராஜ், இந்த படத்தை யூனிவர்ஸ் அளவுக்கு பேசுவதை கேட்கும் போது கொஞ்சம் பயமா இருக்கு. கமல் சாருக்கு படம் பண்ணும் போது கொஞ்சம் பயமா தான் இருந்தது. ஏன் என்றால், சிறுவயதிலிருந்தே இவரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான்.

கமல் சார் முழுமையாக சுதந்திரத்தை எனக்கு கொடுத்தார். ஏன் என்றால் கைதி படத்தின் க்ராஸ்ஓவர் வைத்தது, அந்த கதாபாத்திரத்தை படத்தில் கொண்டுவருவது ஒரு புதுமையான விஷயம். கமல் சார் இந்த படத்தை நன்றாக புரிந்து கொண்டது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்றார். அதற்காக எத்தனை முறை அவருக்கு நன்றி கூறினாலும் பத்தாது என்றார்.

விக்ரம் படத்தின் முதல் காட்சி முடிந்ததும்,கமல் சார் எனக்கு போன் செய்து படம் வெற்றி பெற்றுவிட்டது வாழ்த்துக்கள் என்றார். இந்த படத்தை முடித்துவிட்டோம் என்று ப்ரேக் எடுக்காதே, அடுத்த கதைக்கு ரெடியாகு என்றார் இது அவர் கொடுத்த அட்வைசாக நான் எடுத்துக்கொள்கிறேன். கூடுதல் பொறுப்புடன் அடுத்த படத்திற்கு செல்கிறேன் என்றும் லோகேஷ் கனராஜ் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement