• Jan 19 2025

இதனால தான் பணப்பெட்டி எடுத்தேன், மாயாவும் தான் காரணம்- பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த உண்மைகளை உடைத்த பூர்ணிமா

stella / 1 year ago

Advertisement

Listen News!


 பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை 4 நாட்களில் எட்டி விடும். அதனாலேயே போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாட்டை காண்பிக்கிறாங்க . இந்த வேளையில்  பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப்பெட்டியை யார் எடுப்பார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, பிக் பாஸ் வீட்டில் 16 லட்சத்துடன் பூர்ணிமா வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்ட வேளியேறிய பூர்ணிமா முதன் முதலாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்"பிக் பாஸ் வீட்டில இருந்து வரும் போது ரொம்ப உடல் நிலை சரி இல்லாம தான் வந்தேன் . குடும்பம் , நண்பர்களை பார்க்கிற ஆசையில வந்தேன் . போக போக அதெல்லாம் மாறிட்டே போகுது . 


வெளிய வந்து பார்க்கும் போது என்னையும் விஷ்னுவையும் பத்தி தான் மீம்ஸ் வந்து இருக்கும்  என்று நினைச்சேன் . ஆனால் என்னையும் மாயாவையும் பற்றி தான் நிறைய மீம்ஸ் செஞ்சி இருக்கு . இதை நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல . 

இருந்தாலும் இது எல்லாம் மீடியால வரும் போது சகஜம் தான் . இதெல்லாம் முகம் கொடுக்க தான் வேணும் . பிக் பாஸ் வீட்டுக்குள்ள நான் ஆரம்பத்தில போகும் போது நான் யாரையும் நண்பர்களாவும் நினைக்கல யாரையும் எதிரியாகவும் நினைக்கல . நான் தலைவரானதில இருந்து பிரச்சினை ஆரம்பிச்சிட்டு , அப்போ அந்த நேரத்தில மாயா மட்டும் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க அதில இருந்து தான் நான் மாயாவோட நெருக்கமானன் . 


எனக்கும் மாயாவுக்கும் கூட சண்டைகள் வந்து இருக்கு . முரண்பாடுகள் வந்து இருக்கு எங்க பிரண்ட்ஷிப் சுவீட்டாவே போகல எங்களுக்குள்ளேயும் நிறைய பிரச்சனை வந்து இருக்கு . 

மாயா எனக்கு எப்பிடி நட்போ அதே மாதிரி தான் விஷ்ணுவும்  கொஞ்ச நாள் என்னோட நல்ல கிளோஸ் ஆ சப்போர்ட்டா இருந்தாங்க  அப்புறம் விலகிட்டாங்க . ஒரு ஒரு நேரம் ஒரு மாறி கதைப்பாங்க விஷ்னு அதனால தான் நாங்க எல்லோரும் பச்சோந்தி என்று நக்கல் அடிச்சம் . 

அப்புறம் எல்லோரையும் பற்றி படிச்சிடடேன் . யாரும் உண்மை இல்லை எல்லோரும் கேம் தான் என்று புரிஞ்சிட்டேன் . அதனாலேயே எனக்கு கொஞ்ச நாளா பிக் பாஸ் வீட்டில இருக்க பிடிக்காம போனது . நிறைய பெயர் என்னட்ட கேக்கிற விஷயம் ஏன் பணப்பெட்டி எடுத்தீங்க என்று எனக்கு உண்மையிலேயே வெற்றி  கிடைக்கும் நம்பிக்கை இருக்கவில்லை . பணம் எடுத்தா எனக்கு பிரயோசனம் என்று தான் எடுத்தேன் . வேறு ஒரு காரணமும் இல்லை . 


அதே மாதிரி நிறைய பெயர் பிரதீப் விஷயம் கேட்டு இருந்திங்க நான் அதை பற்றி அடுத்த வீடியோல கதைக்கிறேன் என்று சொல்லியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement