• Jan 19 2025

ஹீரோயின் என்றாலே இந்த பிரச்சினை இருக்கும், உண்மையை உடைத்த மீனா?- மறுமணம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 90களில் பிரபல்யமா நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனத. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபல்யமானவர். தற்பொழுது நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

இவர் கடந்த 2009 -ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் வித்யாசகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த வித்யாசாகர், கடந்த 2022 -ம் ஆண்டு காலமானார். 


கணவரை இழந்த துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா, சமீபகாலமாக நடிப்பிலும் கவனம் செலுத்து வருகிறார்.மேலும் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகின்றார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மீனாவிடம் இரண்டாம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதில் அளித்த மீனா, "கணவர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், அவரது மறைவை என்னால் ஈடு செய்ய முடியவில்லை. ஒரு ஹீரோயின் தனியாக இருந்தாலே பல வதந்திகள் தொடர்ந்து வரும்".


"அந்த மாதிரியான வதந்திகள் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பாதித்தது. தற்போது வரை மறுமணம் குறித்து யோசிக்கவில்லை. எனக்கு மகள் இருக்கும் சூழலில் மறுமணம் என்பது அவரையும் சார்ந்தது தான்" என்று மீனா கூறியுள்ளார். 


Advertisement

Advertisement