• Jan 18 2025

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்! 7 ஆண்டுகளாக புதைந்து கிடந்த உண்மை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

2016ம் ஆண்டு உயிரிழந்த நடிகர் கலாபவன் மணியின் மரண விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி அளவுக்கு அதிகமாக அவர் பீர் குடித்ததே மரணத்திற்கு காரணம் என விசாரணை அதிகாரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழில் வெளியான ஜெமினி, மறுமலர்ச்சி, ஜே.ஜே., உனக்கும் எனக்கும், வாஞ்சிநாதன், குத்து, எந்திரன், என தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் தான் கலாபவன் மணி.


இவர் கடந்த  2016-ம் ஆண்டு சாலக்குடியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். இதை தொடர்ந்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், கலாபவன் மணியின் மரண விவகாரம் தொடர்பில் 'கலாபவன் மணி பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் 10 முதல் 12 பாட்டீல் வரை பீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.  2016 ம் ஆண்டு மரணமடைவதற்கு முன் 10 பாட்டீல் பீர் குடித்ததில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரத்த வாந்தி எடுத்த நிலையில் மேலும் பீர் குடித்ததால் ரத்தத்தில் மெத்தில் ஆல்ஹால் அதிகளவு இருந்தது பிரேதபரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் மரணமடைந்தார்' என மரண அறிக்கை வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement