• Jan 19 2025

ஈஸ்வரியின் ஆரம்பமே ஏதோ அபசகுணமா இருக்கு.? கோபியின் சதித்திட்டம் பலிக்குமா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழில் வீட்டுக்கு அமிர்தாவின் அம்மா வருகின்றார். அங்கு எந்தவித சாமானும் இல்லை என்று தெரிந்ததும் தான் வாங்கி வருவதாக சொல்கின்றார். ஆனாலும் அமிர்தா வேண்டாம் என்று மறுக்கின்றார்.. அந்த நேரத்தில் எழில் கையில் சாமான்களோடு வருகின்றார். இதை பார்த்து அமிர்தாவின் அம்மா சந்தோசப்படுகிறார்.

மேலும் நிலாவுக்கு தான் தோசை செய்து தருவதாக சொல்லி தோசை சுட்டு கொடுக்கின்றார். இதன்போது அமிர்தா தான் ஏதும் வேலைக்கு போகட்டுமா என்று கேட்கிறார்.. ஆனாலும் எழில் வேண்டாம் இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லுகின்றார். நிலாவுக்கு சாப்பாடு ஊட்டி விட அதை பார்த்து அவருடைய அம்மா சந்தோசப்படுகிறார்.


மறுபக்கம் ஈஸ்வரி அடுப்பை பத்த வைக்கும் போது தீக்குச்சி பத்தவில்லை அதன் பின்பு சாமியை வேண்டி விட்டு பற்றவைக்கின்றார். ஒருவழியாக எல்லாம் சமைத்து முடிந்து பரிமாறும் போது பழனிச்சாமி வருகின்றார். அங்கு பரபரப்பாக வேலை நடந்து கொண்டு இருப்பதை பார்த்து ஈஸ்வரியுடன் கதைத்துக் கொண்டிருக்கின்றார். ஆனாலும் செப் மனதுக்குள் சந்தோசமாக இருக்கிறார். காரணம் என்னவென்று தெரியவில்லை. அவர் இதை குழப்புவதற்காக சதி திட்டம் போட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து ஈஸ்வரி வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்ல, பழனிச்சாமி அவரை கூட்டிச் செல்கிறார். போகும் வழியில் ஈஸ்வரி தான் ராசி இல்லாதவள் என்று வீட்டாரை தவிர எல்லோரும் சொல்வதாக சொல்லி மனம் வருத்தப்படுகின்றார்.

Advertisement

Advertisement