தமிழ் சினிமாவில் ‘இறுதிசுற்று’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரித்திகா சிங். குத்துச் சண்டைப் போட்டியாளராக இருந்து, சினிமாவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய இந்த வீராங்கனை, நடிப்பிலும் நம்மை கவர்ந்துவிட்டார். “ஆண்டவன் கட்டளை”, “சிவலிங்கா”, “மழைபிடிக்காத மனிதன்” உள்ளிட்ட படங்களில் அவர் தன் திறமையை நிரூபித்தார்.
இப்போதெல்லாம் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களிலும் ரித்திகா வரவேற்பைப் பெற்றுள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘வேட்டையன்’ படத்திலும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால், இந்த வெற்றிப் பயணத்திற்கு இடையில் அவர் உடல் எடை அதிகரித்தது காரணமாக கடுமையான உளவியல் மற்றும் உடலியல் சவால்களை சந்தித்திருக்கிறார். தற்போது அந்த அனுபவங்களை ஒரு முன்னோட்ட வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்போது "கடந்த 3 மாதங்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்," என உருக்கமாக தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார் ரித்திகா. மேலும் "நான் இதுவரை இல்லாத அளவுக்கு எடை கூடிவிட்டது. இந்தச் சூழ்நிலையால் எனது முழங்கால்களில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. என்னால் நகர முடியவில்லை. நடனம் ஆட முடியவில்லை. இது எனக்கு பெரும் பேரிழப்பு போலத் தோன்றியது."என்றார்.
வீடியோவில் ஜிம்மில் தீவிர ஒர்க் அவுட் செய்யும் ரித்திகாவின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. உடற்பயிற்சி, வியர்வை, சவால், சோர்வு எல்லாம் அந்த வீடியோவில் வெளிப்படையாக தெரிகிறது. அவர் மேலும், "ஒரே மாதத்தில் எதுவும் முடியாது. நான் தினமும் எனது உடலை தண்டித்தேன். வலியைத் தாங்கினேன். உணவை கட்டுப்படுத்தினேன். என் மனதுடன் போராடினேன். ஆனால் ஒவ்வொரு நாளும், எனக்குள்ளே ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன்." எனவும் கூறியுள்ளார்.
Listen News!