• Jan 15 2025

இணையத்தில் லீக்கான இந்தியன் 3 படத்தின் டிரைலர் காட்சி! உச்சகட்ட தலைவலியில் படக்குழுவினர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ மற்றும் 2.0 படங்கள் விமர்சன ரீதியில் பெரிய அடி வாங்கி இருந்தன. அவற்றை எல்லாம் இந்தியன் 2 திரைப்படம் முறையடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்றைய தினம் தியேட்டர்களில் படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது.

இந்தியன் 2 படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் தியேட்டரில்  அலைமோதி வரும் நிலையில், இந்த படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் டிரைலர் இடம்பெருமென கேரளாவில் இடம் பெற்ற ப்ரொமோஷனில் கமலஹாசன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் திரையிடப்பட்ட இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 திரைப்படத்தின் டிரைலரை பார்த்த நெட்டிசன்கள் அதனை சோசியல் மீடியாவில் வெளியிட்டு படக்குழுவினருக்கு பயங்கர தலைவலியை உண்டாக்கியுள்ளனர்.


மேலும்,  அனிருத் பாடிய 'பாரா' என்ற பாடலும் இந்தியன் 2 வில் இடம்பெறவில்லையாம். அது இந்தியன் 3க்குரிய பாடல் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியன் 2 படத்தின் கிளைமாக்ஸ் இல் அந்தப் பாடலுடன் இந்தியன் 3 திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு வெளியான இந்தியன் 3 படத்தின் டிரைலரில், சேனாதிபதி கமலஹாசன் தனது தந்தையும் சுதந்திரப் போராட்ட வீரர் தான் என அவர் பெயர் வீரகேசவரன் என்று அவர் பற்றிய பிளக்ஸ் பேக்கை  சொல்லுகின்றார். இந்தியன் 3 படம் முழுக்கவே பீரியட் போர் காட்சிகள் நிறைந்த படமாக  உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சேனாதிபதியின் அப்பா வீரசேகரனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் காட்டப்பட்டுள்ளார். இதில் சேனாதிபதியின் இளமை தோற்றம் என பல விஷயங்கள் இடம் பெறுவதை இந்த ட்ரெய்லர் காட்டியுள்ளது.

Advertisement

Advertisement