• Jan 13 2025

மேல கை வைக்காத! வயசுக்கு தான் மரியாதை சைசுக்கு இல்ல! பங்கம் செய்த சத்யா- ஜெப்ரி

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இன்றைய நாள் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது குறித்து பார்ப்போம். 


தமிழ் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சுவாரஷ்யத்துக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் இந்த சீசனில் கடந்த வாரம் அருண் மற்றும் தீபக் எலிமினேஷன் ஆகினார்கள். அதனை அடுத்து இன்றைய முதல் ப்ரோமோவில் தர்ஷிகா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். 


இந்நிலையில் வெளியாகிய ப்ரோமோவில் சத்யா மற்றும் ஜெப்ரி உள்ளே வருகிறார்கள். உள்ளே வந்த இருவரையும் பார்த்த போட்டியாளர்கள் சந்தோசமாக வரவேற்கிறார்கள். மேலும் ஜெப்ரி மற்றும் சத்யா போட்டியாளர்கள் முன்னிலையில் பேசுகிறார்கள். 


அப்போது சத்யா அர்னவ் மாதிரி செய்து காட்டுகிறார். ஜெப்ரி முதலில் பட்டனை போடுங்க சார் என்று சொல்கிறார். அதற்கு சத்யா "மேல எல்லாம் கை வைக்காத" என்று சொல்கிறார். ஜெப்ரி "சார் உங்களுக்கு வயசுக்கு தான் மரியாதையை சைசுக்கு இல்ல" என்று சொல்லி கலாய்க்கிறார். போட்டியாளர் அனைவரும் சத்யா அர்னவ் மாதிரி செய்வதை பார்த்து சிரிக்கிறார்கள். 


பின்னர் சத்யா "ஏன்டா ஜெப்ரி டைம் வேஸ்ட் பண்ணுற இவன் எந்த சீசன்டா" என்று சத்யாவை பார்த்து கேட்கிறார். அதற்கு சத்யா "மக்கள் கேட்ட சொன்னதை தான் கேட்டோம்" என்று சொல்கிறார். அதேநேரம் ரவீந்தர் "எங்களுக்கு உங்களை விட நல்லா பன் பண்ண தெரியும்" என்று கோபமாக சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

Advertisement

Advertisement