• Feb 22 2025

தமிழறிஞர் சாலமன் பாப்பையா வீட்டில் நடந்த துயரம்! இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழறிஞர் சாலமன் பாப்பையா பட்டிமன்றங்கள் நெறிப்படுத்துவதில் சிறந்து விளங்குபவர். பட்டிமன்றம் என்றாலே அது சாலமன் பாப்பையாதான் ஞாபகத்தில் வருவார். அப்படி இருக்க இவர் உடைந்து போய் அழுகும் விதமாக இவரின் மனைவி ஜெயபாய் உயிரிழந்துள்ளார். இவருக்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள். 


தமிழறிஞர், முன்னாள் பேராசிரியர், பட்டிமன்றங்களின் நடுவராக இருப்பவர் சாலமன் பாப்பையா. இவர், அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி ஜெயபாய் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் மலையில் அவரது இல்லத்தில் இறுதி சடங்கு நடாத்தப்பட்டு தத்தனேரியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


இது பற்றி தகவல் அறிந்த தமிழக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் சாலமன் பாப்பையாவுக்கும், குடும்பத்தினருக்கும் பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் ஆறுதல் கூறிவருகிறார்கள். 

Advertisement

Advertisement