2022-ம் ஆண்டு வெளியான ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம், பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் பெரும் வெற்றியை கண்ட அந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக ‘காந்தாரா 2’ உருவாகி வருகிறது.
தற்போது, 'காந்தாரா 2' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, படக்குழு அதிகாரபூர்வமாக ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளது. இந்தப் படத்திற்காக படக்குழுவினர் மூன்று ஆண்டுகளாக கடுமையாக உழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் ரிஷப்ஷெட்டிக்கு இணையாக, முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயராம் மற்றும் ருக்மிணி வசந்த் நடித்து உள்ளனர். ருக்மிணி வசந்த், 'கனகவதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவருடைய பிறந்தநாளையொட்டி, படக்குழுவினர் அவருக்காக சிறப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
படத்தின் இசையை அஜேஷ் லோக்நாத் வழங்குகிறார். ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம், வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
Listen News!