• Oct 22 2024

ஆரம்பமாகிறது 'விடாமுயற்சி' படப்பிடிப்பு... தல ரசிகர்களுக்கு சுடச்சுட வெளிவந்த சூப்பரான தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது. விஜய்யின் வாரிசுக்குப் போட்டியாக வெளியான துணிவு திரைப்படமானது பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டியது. அஜித்துக்கு தரமான கம்பேக் கொடுத்த துணிவு, 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தமை குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து மகிழ் திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குநராக கமிட்டானார். அதன்படி, ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆனதுடன், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அஜித் தொடர்ச்சியாக பைக் டூர் சென்றுகொண்டிருந்தமையினால் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் விடாமுயற்சி அப்டேட் எப்போது வெளியாகும் என கேட்ட வண்ணம் இருக்கின்றனர். 


இந்நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதாக கிட்டத்தட்ட உறுதியான தகவல் வெளியாகி இருக்கின்றது.

மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு அபுதாபியில் இடம்பெறவுள்ளதாகவும், இது 40 நாட்கள் நடைபெறும் எனவும் கூறப்படுகின்றது. அத்தோடு இப்படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா மற்றும் ஹுமா குரேஷி கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement