• Jan 18 2025

பிக் பாஸில் நடந்து முடிந்த சூட்டிங்.. தீபாவளிக்கு ட்விஸ்ட் இருக்கா? இல்லையா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சம் தொட்ட ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதலாவது ஆகவே எலிமினேட் ஆகி வெளியே சென்றிருந்தார் தயாரிப்பாளர் ரவீந்தர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் ஆரம்பத்திலேயே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு காரணம் இந்த முறை பங்கு பற்றிய போட்டியாளர்களுள் அதிகமானவர்கள் விஜய் டிவி பிரபலங்களாகவே காணப்பட்டார்கள்.

இதன் காரணத்தினால் பிக் பாஸ் சீசன் 8 மீது நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும் இந்த சீசன் சுவாரசியம் இல்லாமல் செல்வதாகவும் குறிப்பிட்டார்கள். ஆனாலும் விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்குவதால் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு காணப்பட்டது.

d_i_a

தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்று பேர் வெளியானதை  தொடர்ந்து, ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரிகள் உள்ளே வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் யார் வெளியேறி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக உள்ளது. 


அதன்படி இந்த வாரம் அன்சிகா எலிமினேட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த வாரம் தீபாவளி என்பதால் எலிமினேஷன் இருக்காது என்றும் கூறப்படுகின்றது. ஆனாலும் நாளைக்கு நடைபெற இருக்கும் ஷூட்டிங்கில் இன்று நடைபெற்றிருக்கும் நிலையில் அன்சிகா வெளியேற்றப்பட்டு  விட்டார் என்று சிலர் கூறி வருகின்றார்கள்.

இதே வேளை வாக்குகளின் அடிப்படையில் சுனிதா கடைசி நிலையில காணப்பட்ட போதும் அவர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிரீ டிக்கெட் பெற்று சேவ் ஆனார். இதன் காரணத்தினால் அவருக்கு அடுத்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்ற அன்சிகா எலிமினேட் ஆகி இருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement