• Jul 04 2024

படப்பிடிப்பு நிறைவு பெற்று அடுத்த கட்ட தயாரிப்பு வேலைகளில் "தேசிங்குராஜா - 2"

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

இயக்குனர் எழிலின் இயக்கத்தில் விமல் மற்றும் பெரும் காமெடி பட்டாளம் நடிப்பில் கடந்த 2013 ஆண்டு வெளியான "தேசிங்குராஜா" திரைப்படமானது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் விமலுக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது.தமிழ் சினிமாவின் எவர் கிறீன் காமெடி படங்களிலும் இடம்பிடித்தது "தேசிங்குராஜா" திரைப்படம்.


இதே கூட்டணி 10 வருடங்களின் பின் மீண்டும் இணைந்து "தேசிங்குராஜா - 2" இற்கான அறிவிப்பை வெளியிட்ட போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.இப் படத்தில் விமலிற்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா மற்றும் ஹர்ஷிதா ஆகியோர்  நடிக்கிறார்கள்.


படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த படக்குழு படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். விரைவில் படத்திற்கான அடுத்த கட்ட வேலைகள் நிறைவு பெற்று படத்தை திரையில் எதிர்பார்க்கலாம்.

Advertisement

Advertisement