• Jan 19 2025

3 ஆன்ட்டி டான்ஸ் வேற லெவல்.. ஒன்று சேர்ந்த சிறகடிக்க ஆசை பெண்கள்.. மீனா பகிர்ந்த வீடியோ..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் தற்போது பாட்டியின்  80 வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் கிட்டத்தட்ட இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த புகைப்படங்களும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அண்ணாமலை - விஜயா குடும்பத்தில் உள்ள மூன்று மகன்கள், மூன்று மருமகள்கள் மற்றும் விஜயாவின் தோழி பார்வதி, ஸ்ருதியின் அம்மா, மீனாவின் அம்மா மற்றும் தங்கை, முத்துவின் நண்பர் செல்வம், மற்றும் மீனாவின் தம்பி சத்யா உள்ளிட்ட அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களையும் இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஸ்ருதியின் அம்மா, சீதா, விஜயா, அவருடைய தோழி பார்வதி ஆகியோர்களுடன் மீனா, ரோகிணி, ஸ்ருதி,  ஆகியோர்களும் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த சீரியலில் உள்ள 7 முக்கிய பெண் கேரக்டர்களும் ஒரே நேரத்தில் டான்ஸ் ஆடுவது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மீனா மட்டும்தான் இந்த ரீல்ஸில் வருவார் என்று நினைத்தேன், ஆனால் ஒட்டுமொத்த பெண்களும் டான்ஸ் ஆடியது  மகிழ்ச்சி எனவும், இதைத்தான் நான் எதிர்பார்த்தேன், மீனா, ரோகிணி, ஸ்ருதி ஆகியோர்கள் மூவரும் செம ஆட்டம் ஆடுகிறார்கள் எனவும்,  ஸ்ருதி அம்மா, விஜயா மற்றும் பார்வதி ஆகிய மூன்று ஆன்ட்டிகள் செமையாக டான்ஸ் ஆட உள்ளார்கள் எனவும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

இந்த வீடியோவை பார்க்கும் போது பாட்டியின் 80வது பிறந்த நாள் நிகழ்ச்சி குறித்த எபிசோடுகள் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement