• Jan 18 2025

விஜய்யின் நீட் பேச்சுக்கு த்ரிஷா காரணமா? சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் இன்று நடந்த கல்வி விருது வழங்கும் விழாவில் நீட் தேர்வு குறித்து பேசியதற்கு த்ரிஷா தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது தமிழகத்தில் உள்ள ஆளுங்கட்சியை தான் எதிர்த்து பேசினார். குறிப்பாக தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் விஜய்யுடன் திரிஷா இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி விஜய்யின் இமேஜை டேமேஜ் ஆக்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த புகைப்படத்தை விஜய் இடம் காட்டி ஒரு பிரபல அரசியல் கட்சி மிரட்டல் விடுத்ததாகவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பேசாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று கூறியதாகவும் அதனால்தான் இன்று நடந்த விழாவில் விஜய் நீட் தேர்வு குறித்து பேசியதோடு மாநில அரசை ஆதரித்தும் மத்திய அரசை எதிர்த்தும் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் விஜய் பேசியது ஒரு சமுதாய நலத்திற்காக என்றும் இதை வைத்து வதந்திகள் பரப்புவர்கள் கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள் என்றும் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement