• Jul 06 2024

விஜய் சேதுபதியின் முதல் ரூ.100 கோடி வசூல் படம்.. வேற லெவல் அறிவிப்பு..!

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’மகாராஜா’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நடிகருக்கும் 50வது படம் முக்கியமான படம் என்ற நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி 100 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

’மகாராஜா’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ’பேட்ட’ ’மாஸ்டர்’ ’விக்ரம்’ ’ஜவான்’ உள்ளிட்ட படங்கள் மிக அதிக அளவில் வசூல் செய்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்த ஒரு திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement