இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்படி என்றால் எச் வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருந்த ’தளபதி 69’ படம் என்ன ஆச்சு என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான கேவிவி என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது எச் வினோத் நடிக்க இருக்கும் ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பு கொண்டிருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. மேலும் இந்த படத்தை ’மகாராஜா’ படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ’தளபதி 69 ’ படத்தை முடித்துவிட்ட பின்னர் தான் சிவகார்த்திகேயன் படம் தொடங்கும் என்றும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஏஆர் முருகதாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதை முடித்தவுடன் சிபி சக்கரவர்த்தி படத்திலும் நடிக்க இருப்பதால் இந்த இரண்டு படங்களை முடித்த பிறகு எச் வினோத் - சிவகார்த்திகேயன் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Listen News!