இன்றய தினம் தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் தலைமையில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் விஜய் நீட் தேர்வுக்கு எதிராக பேசியுள்ளமை பெரிய அளவில் வைரலாகின்றது.
அவ்வாறு அவர் பேசும் போது பின்தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இதற்கு என்னிடம் மூன்று ஜோசனை உள்ளது இதனை அரசு பின்பற்றினால் நல்லது எனவும் கூறியிருந்தார். அவ்வாறு அவர் கூறிய கருத்துக்கள்
"பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதுதான் ஒரே தீர்வு இல்லையெனில் அரசமைப்பை திருத்தி சிறப்பு பொதுப் பட்டியல் ஒன்றை உருவாக்கலாம் சிறப்பு பொதுப் பட்டியல் ஒன்றை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும் பொதுப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை; ஒன்றிய அரசுக்கே அதிகாரம் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற கல்லூரிகளுக்கு மட்டும் ஒன்றிய அரசு நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம்" இவ்வாறு கூறியிருந்தார்.
Listen News!