• Jan 19 2025

வரலட்சுமிக்கு குழந்தை கிடைப்பதில் சிக்கல்.. நிக்கோலாய் ஆபத்தானவர்! போட்டுடைத்த மருத்துவர்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் சரத்குமார், தனது மகள் வரலட்சுமிக்கு அவர் காதலித்த நிக்கோலாய் சத்தேவை திருமணம் செய்து வைத்தார். இவர் பிரபல தொழிலதிபராக காணப்படுவதோடு மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்துள்ளார்.

நிக்கோலாய் பெரும் கோடீஸ்வரராக காணப்படுவதோடு, அவருக்கு செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அனைவரிடமே நல்ல பழக்கம் காணப்படுகின்றது.

ஆனாலும் அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். அவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கின்றார். இப்படியான சூழ்நிலையிலேயே வரலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கு வரலட்சுமி வீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பவில்லை.

இதை தொடர்ந்து ஜூலை இரண்டாம் தேதி இருவரது திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை தாய்லாந்தில் முடித்துவிட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள். அதில் அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.


இந்த நிலையில்,  வரலட்சுமி நிக்கோலாய் திருமணம் குறித்து பிரபல மருத்துவரும் திரை ஆர்வலருமான காந்தராஜ் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். 

அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், நிக்கோலாய் ஆபத்தானவராக கூட இருக்கலாம். முதல் மனைவிக்கு துரோகம் செய்து டார்ச்சர் கொடுத்து இருக்கலாம். அதோடு பல பெண்களுடன் தொடர்பிலும் இருந்திருக்கலாம். இந்த திருமணத்திற்கு சரத்குமார் முதல் மனைவி சாயாதேவி வரவில்லை. ஒருவேளை சாயாதேவியை சரியான வகையில் வரலட்சுமி நடத்தாமல் இருந்திருக்கலாம்.


நிக்கோலால் சத்தேவை வரலட்சுமி தனது 39 வது வயதில் திருமணம் செய்துள்ளார். இது ஒரு லேட் மேரேஜ். இதன் காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படும்.  இந்தியாவில் இவர்களது திருமணம் நடந்திருந்தால் சட்ட சிக்கல் ஏற்படலாம். இதனால் தான் தாய்லாந்தில் திருமணத்தை நடத்தி இருக்கலாம்.

திருமண வயதில் நிக்கோலாவுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கின்றாள். இப்படி இருக்க இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறாக கருதப்படும் அல்லவா? இந்த திருமணம் ஒரு சமூக பாதுகாப்புக்கு தான் நடந்திருக்கின்றது. இதில் எந்த காதலும் இல்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். பல பெண்களோடு அவருக்கு தொடர்பு இருந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

இந்த விடயம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்டது. இதனால் ஏன் காந்தராஜ் இதில் தேவை இல்லாமல் தலையிடுகின்றார் என்று கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

Advertisement

Advertisement