• Jan 15 2025

அந்த படம் கொடுத்த வலிகள், காயங்கள்.. இன்றும் அழுது கொண்டுள்ளேன்! செல்வராகவன் வேதனை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் இயக்குனர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் செல்வராகவன். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகின்றார். தனது படைப்பில் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் அதனுள் மனித மனதிற்குள் இருக்கும் அழுக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுவதில் கைதேர்ந்தவராக காணப்படுகின்றார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தனது அயராத உழைப்பாளழும், அசாத்திய கதை திரைக்கதையாலும் பல்வேறு ஆய்வுகளை செய்து செல்வராகவன் எடுத்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் இரண்டாம் பாகம் தொடர்பில் ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில் அவர் கூறுகையில், நிறைய பேர் என்னை ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி பேச சொன்னார்கள். எனக்கு என்ன பேசுறது என்று தெரியவில்லை. அந்தப் படம் கொடுத்த ரணங்கள், காயங்கள், வலிகள் அவ்வளவு உள்ளது. இப்போது வரை அதை நினைத்து அழுது கொண்டுதான் உள்ளேன். 

அந்தப் படத்தில் நடிப்பதற்கு திறமையான நடிகர்கள் கிடைத்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. முக்கியமாக ஜிவி பிரகாஷ் நிறைய கஷ்டப்பட்டு அந்த படத்திற்கு இசையமைத்தார். நாங்கள் உங்களிடம் கேட்பது ஒன்றுதான் படம் நன்றாக இருந்தால் ஒரு சின்ன வாழ்த்து தெரிவித்தால் போதும். அது மட்டுமே நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement