• Apr 28 2024

அதிரடியாக வெளியான பிக்பாஸ் அடுத்த ப்ரமோ...கமல் சேர் வேற லெவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் கடந்த 2017ம் ஆண்டு  விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை தொடங்கும் பணி  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

ஆறாவது சீசன் தொடங்கப்போகிறது என்ற தகவல் வெளியானதுமே, சமூக ஊடகங்களிலும் பல போட்டியாளர்களின் பெயர்கள் வெளியாகி வருகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ்.மேலும்  இந்த நிகழ்ச்சி தொடங்கினாலே அடுத்த நூறு நாட்களுக்கு அனைவருக்கும் சுவாரசியத்திற்கு பஞ்சமே இருக்காது. சண்டை,அழுகை, காதல், ரொமான்ஸ், நட்பு, பாசம், கேலி, ஆட்டம் பாட்டம் என பல உணர்வுகளை இந்த நிகழ்ச்சியில் நாம் பார்க்க முடியும். பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சிலர் குறை கூறி வந்தாலும், அதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது.



விரைவில் 6-வது சீசன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசனையும் வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு  மிகவும் அதிகரித்துள்ளது. 

இவ்வாறு இருக்கையில் பிக்பாஸின் அடுத்த ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் கமல் வந்து “வேட்டைக்கு ரெடியா” என மாஸ் டயலொக் கூற அந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement