• Apr 28 2024

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தந்தையும் இசைக்கலைஞர் தானா..? வெளியானது அவரது புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த முன்னணி இசையமைப்பாளர்கள் பலர் காணப்படுகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் .மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார்.


இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த வகையில் ரஜினியின் முத்து, சிவாஜி, எந்திரன், 2.0 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்தும் இருக்கிறார்.



மேலும் இவர் இசையில் சமீபத்தில் கோப்ரா திரைப்படம் வெளிவந்தது.படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரஹ்மானின் இசை நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு வெளியாகவுள்ளது.அதன்பின், தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ளது.


அத்தோடு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தந்தை ராஜகோபால குலசேகரன் என்கிற R.K. சேகர் அவர்கள் ரஹ்மானுக்கு சிறு வயது இருக்கும்போதே இறந்துவிட்டார்.

R.K. சேகரும் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் தந்தை R.K. சேகரின் புகைப்படம்  தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்..



Advertisement

Advertisement

Advertisement