விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டி போட்டு பல பிரபலங்களும் பங்கு பற்றி வருகின்றார்கள். அதற்கு காரணம் இதில் பங்கு பற்றும் பிரபலங்களுக்கு புகழோடு பட வாய்ப்புகளும் கிடைப்பது தான்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பல பிரபலங்கள் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்கள். இதனால் அவர்களுடைய வாழ்க்கையிலேயே பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வெற்றியாளர் ஒருவர் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அதாவது பிக் பாஸ் சீசன் ஐந்தில் வெற்றி பெற்ற ராஜி ஜெகன் மோகன் முதன் முதலாக 'பன் பட்டர் ஜாம்' என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தின் கதை நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக் கொள்ளும் இன்றைய இளைஞர்களை பற்றி உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை, இந்த படத்தை 'காலங்களில் அவள் வசந்தம்' படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!