• May 18 2024

விபத்தில் சிக்கிய 'தி கேரளா ஸ்டோரி' பட நடிகை... வெளியான அதிர்ச்சித் தகவல்.. அவரின் தற்போதைய நிலை இதுதானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இருப்பினும் இந்த படம் பல தடைகளைத் தாண்டித் தான் வெளிவந்திருக்கின்றது.


அதாவது கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதனால் இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்ததோடு, பல எதிர்மறையான விமர்சனங்களும் கிளம்பி இருந்தன.


இப்படத்தில் அடா ஷர்மா, சித்தி இதானி மற்றும் ஒரு சில நடிகைகள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் இதில் நடித்த நடிகை அட ஷர்மா விபத்தில் சிக்கியுள்ளார் என அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 


இதனையடுத்து அடா ஷர்மா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது "நான் நன்றாக தான் இருக்கிறேன். விபத்து குறித்து தகவல் பரவியதும் எனக்கு நிறைய மெசேஜ் வந்தது. எங்கள் படக்குழுவில் அனைவரும் நன்றாக இருக்கிறோம். ஒன்றும் பிரச்னையில்லை. பெரிய விபத்து எதுவும் இல்லை. நீங்கள் என் மீது கொண்ட அக்கறைக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement