• Jan 07 2025

இட்லி கடை ஷுட்டிங் ரெஸ்டில் நடந்த சுவாரஸ்யம்.! குபேரா படத்திற்காக இப்படியொரு ரிஸ்க்கா?

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகருக்கான பெயரை பெற்றவராக தனுஷ் காணப்படுகின்றார். இவர் இறுதியாக ராயன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 50வது படமாக அமைந்ததோடு வசூல் ரீதியாக சாதனை படைத்த படமாகவும் அமைந்தது.

இதைத்தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், குபேரா, இட்லி கடை, இளையராஜாவின் பயோபிக் என பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய இரண்டு படங்களையும் தானே இயக்கி நடிக்கின்றார்.

சமீபத்தில் குபேரா படத்தில் இருந்து வெளியான பர்ஸ் லுக் போஸ்டரில் தனுஷ் தாடியுடனும் யாசகர் வேடத்திலும் காணப்பட்டார். அதில் தனுஷின் கெட்டப்பே மொத்தமாக வேற மாதிரி காணப்பட்டது. இதனை தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முல்லா இயக்குகின்றார்.

d_i_a

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமே இல்லாமல் பாடகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக பன்முகம் கொண்டு திகழும் தனுஷ் குபேரா படத்துக்கு எடுத்த ரிஸ்க் பற்றிய தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது சேனலில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், தனுஷ் தற்போது மிக உயர்ந்த இடத்தில் காணப்படுகின்றார். பாடல் எழுதுவது, டைரக்ஷன் பண்ணுவது, நடிப்பது என  வேற லெவலில் காணப்படுகின்றார். எனக்கு தெரிஞ்சு டி ராஜேந்திரன் பொறாமைப்படும் ஒரு நடிகராக தனுஷ் உள்ளார்.


அதாவது எல்லாவற்றிலும் ஒரு முழுமையான வெற்றி. அரைகுறை இல்லாமல் முழுமையான வெற்றி பெற்றுள்ளார் தனுஷ். அதிலும் ஏனையோரை வைத்து பெயர், புகழ் எடுக்காமல் எல்லாவற்றையும் தானே செய்யும் ஒரு பிரபலமாக தனுஷ் காணப்படுகின்றார்.

தற்போது குபேரா படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார் தனுஷ். இவர் பல படங்களில் பாடலை பாடியிருந்தாலும் இது வேற ஸ்டேட்  இயக்குநர், வேற பாடல் ஆசிரியரின் கீழ் தனுஷ் பாடியுள்ளார் அதுதான் பெருமைக்குரிய விடயம்.

அதிலும் இவர் எவ்வாறான சூழ்நிலையில் பாடியுள்ளார் என்றால் இட்லி கடைக்கான ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும்போது அதில் ரெஸ்ட் எடுக்கும் டைமில் குபேரா படத்திற்கான பாடலை பாடியுள்ளார். 

தனுஷை போலவே ஏனைய நடிகர்களும் தமது உழைப்பில் சின்சியராக இருக்க வேண்டும். அப்போது அவர்களுக்கும் ஏற்ற உயரம், விருது எல்லாம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement