பிரபல இயக்குநரின் மகள் அதிதி சங்கர் தற்போது நேசிப்பாயா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் முன்னிட்டு வெளியாகயுள்ள நிலையில் தற்போது ப்ரோமோஷன் நிகழ்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்திய பேட்டியில் ஆகாஷ் முரளி பற்றி சுவாரஷ்யமான தகவலை பகிர்ந்துள்ளார் நடிகை அதிதி.
இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் தான் "நேசிப்பாயா" . இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளி நடிகராக அறிமுகமாகிறார். மேலும் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14ம் திகதி ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் ஆடியோ லஞ்ச் நிகழ்வு கூட மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் நேசிப்பாயா ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அதிதி மற்றும் நேசிப்பாயா இயக்குநர் விஷ்ணு ஆகியோர் பேட்டில் கலந்து கொண்டனர். அப்போது ஆகாஷ் முரளி பற்றி அதிதி இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் " ஒரு பாட்டுக்காக சூட் பண்ணுறோம் அப்போ விஷ்ணு சார் சொன்னாரு நீங்க இறங்கி வாரீங்க ஆகாஷும் வாராரு இப்படி ஹக் பண்ணுறிங்கனு சொன்னாரு அப்போ ஓகே ஷாட் ரெடி ஆக்சன் சொன்னாங்க நானும் வந்தேன் அவரும் வந்தாரு லைட்டா டச் பண்ணிட்டு போய்ட்டாரு, விஷ்ணு சார் நோ நோ மறுபடினு சொன்னாரு மறுபடியும் அப்படித்தான் செஞ்சாரு. நான் உடனே என்ன சார் இவரு லவ் பண்ணமாட்டேங்கிறாரு, ப்ரோ என்ன பண்ணுறீங்க நாங்க லவ் பண்ணனும் ப்ரோ உரிமையா ஹக் பண்ணுங்க என்று சொன்னேன். அவரு சிரிச்சுக்கொண்டே இல்ல அதிதி ஓகே ஓகே பரவாயில்லையா ஓகேயா என்று ரொம்ப ஸ்வீட்டா கேட்டாரு" என்று பேட்டியில் கூறியுள்ளார்.
Listen News!