பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்மஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இதில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிக அளவில் தியேட்டர்களில் ரிலீசானது. இந்த இரண்டு படங்களும் வசூலிலும் வேட்டையாடி வருகின்றது.
இந்நிலையில், பொங்கல் தினமன்று வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் இதுவரையில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் நாளில் கேப்டன் மில்லர் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த போதிலும், அடுத்தடுத்த நாட்களில் கலெக்ஷன் குறைந்ததாக கூறப்பட்டது.
கேப்டன் மில்லர் திரைப்படம் இன்றைய தினம் நேரடியாக தெலுங்கிலும் வெளியானது
இவ்வாறான நிலையில், கேப்டன் மில்லர் இதுவரை 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024ல் கோலிவுட்டில் ரிலீஸான படங்களில் முதல் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் கேப்டன் மில்லர் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!