• May 30 2025

நடிக்கனும் என்று ஆசையே கிடையாது..! Navyக்கு போகத் தான் ஆசை.. உண்மையை உடைத்த Baby அஞ்சு.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் தான் Baby அஞ்சு. திரையுலகத்தில் “ருக்மணி” படத்திற்குப் பிறகு மிகக் குறைவாகவே அவர் திரையில் தோன்றியுள்ளார். அதற்கான காரணங்களைத் தன்னுடைய சமீபத்திய நேர்காணலில் உணர்ச்சிமிகுந்த வகையில் பகிர்ந்துள்ளார்.

இன்று பல குழந்தை நட்சத்திரங்கள் தங்களை திரைத்துறையில் நிலைநிறுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால் Baby அஞ்சு என்ற பெயருக்கு பின்னால் ஒரு அழுத்தமான கனவு இருந்தது என்பதை இந்த பேட்டி வெளிக்கொண்டு வந்துள்ளது. 


அந்நேர்காணலின் போது, "'ருக்மணி' படம் முடிந்ததும் நான் இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். ஏனென்றால் எனக்கு நடிக்கிறதில ஆசை கிடையாது. எனக்கு படிச்சிட்டு இந்தியன் navyக்குப் போக வேண்டும் என்று தான் ஆசையிருந்தது. அதில தான் முழுக்கவனமும் இருந்தது." என்றார் Baby அஞ்சு. 

மேலும், "எனக்கு அந்த ஆசை வரக்காரணம் சின்ன வயசில ஒரு jewellery கடைக்குப் போயிருந்தேன். அப்ப ஒரு foreign girl அந்த navy ஆடை அணிந்திருந்தார். அதனைப் பார்த்தவுடனே தான் எனக்கு அப்புடி ஒரு விருப்பம் வந்தது." எனவும் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement