• May 07 2024

டான் படத்தின் புதிய சென்சார் தகவலை வெளியிட்ட படக்குழு- செம குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டான். இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நெக்கடிவ் ரோலில் நடித்து வருகின்றார். அத்தோடு இப்படத்தில் ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அத்தோடு டான் திரைப்படம் வரும் மே 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்ஸார் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், படம் 2 மணிநேரம் 43 நிமிடம் ஓடும் எனவும் சொல்லப்படுகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement