• May 18 2024

தளபதி 66 படப்பிடிப்பில் இருந்து நடிகர் ஷாம் வெளியிட்ட புகைப்படம் !

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் . இவர் இறுதியாக இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக்குவித்திருக்கின்றது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66 படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை தில் ராஜு தயாரிப்பதோடு விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி விட்டது.

மேலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூடிட்ங் ஹைதெராபாத்தில் பெரிய செட் அமைக்கப்பட்டு நடந்து வருகின்றது.

பேமிலி என்டேர்டைனர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் விஜய்யுடன் சரத் குமார், பிரகாஷ் ராஜ், ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அண்மையில் நடிகர் ஷாம் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிப்பதை புகைப்படத்துடன் உறுதி செய்திருந்தார்.

எனினும் தற்போது அப்படத்தின் ஷூட்டிங் கேமராவை புகைப்படம் எடுத்து அதனை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்டம்…

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement