• Apr 28 2024

வித்தியாசமான முறையில் பகாசுரன் படத்தை ப்ரோமோட் செய்த படக்குழு- ஊரையே திரும்பி பார்க்க வைத்த விளம்பரம்...

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மோகன். ஜி ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார். மேலும் தொடர்ந்து செல்வராகவனை வைத்து பகாசூரன் என்ற படம் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.இத்திரைப்படம் இளம்பெண்களை குறிவைத்து நடக்கும் ஆன்லைன் குற்றங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் செல்வராகவனுடன் ராதாரவி, ராஜன்.கே, சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன். கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் படத்தை ப்ரோமோட் செய்வதற்கு இயக்குநர் சார்பாக பல்வேறு விளம்பரங்கள் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.. அதற்கு மேல் ஒரு படியாக சென்னையில் இருந்து சேலம் வரை கார் முழுவதும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டி பொதுமக்களிடையே ப்ரோமோட் செய்தனர்..


அதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அந்த விளம்பரம் செய்யப்பட்ட காரினை புதுச்சேரி ரசிகர்கள் வரவேற்றனர். மேலும் படத்தில் நடித்த நடிகர் பாண்டுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தும் தெரிவித்தனர். தொடர்ந்து புதுவையில் இருந்து மீண்டும் கொடியசைத்து அந்த விளம்பர காரினை வழி அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement