• Sep 20 2024

"விடாமுயற்சி" இல் ஆரவ் கிசாரின் லுக்கை பகிர்த்திருக்கும் படக்குழு.

Thisnugan / 1 month ago

Advertisement

Listen News!

அஜித்தின் 62 வது திரைப்படமாக அறிவிக்கப்பட்ட "விடாமுயற்சி" லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.இப் படத்தில் அர்ஜுன் மற்றும் திரிஷா போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.


இந்நிலையில் "விடாமுயற்சி" திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்  நடிகர் ஆரவ் கிசார்.தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகரான ஆரவ் தமிழின் முன்னணி ரியாலிட்டி ஷோவான தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீஸனின் டைட்டில் வின்னராவார்.


தற்சமயம் "விடாமுயற்சி"  படக்குழு வெளியிட்டிரும் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. நாளுக்கு நாள் படத்தின் நடிகர்களின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிடும் "விடாமுயற்சி" படக்குழு தற்போது  ஆரவ்வின் கதாபாத்திர தோற்றத்தை அறிவிக்கும் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது.



Advertisement

Advertisement