• Sep 19 2024

காதலில் விழுந்த நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம்…பொண்ணு யார்…? அவரே கூறிய தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தாலும் தற்பொழுது இவர் நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே சுமாரான வெற்றியையே பெற்று வருகின்றது.

தற்போது விஷாலின் முதல் பான் இந்தியா திரைப்படமாக லத்தி உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் வினோத் குமார் லத்தி படத்தை இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.

44 வயதாகும் நடிகர் விஷால் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவிருந்தது.

இவ்வாறு இருக்கையில் நிச்சையாதார்த்தமும் விமர்சையாக நடந்தது. ஆனால், சில காரணங்களால் இவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டது. இதன்பின், தற்போது விஷாலிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டகப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு பதிலளித்த விஷால், " அப்பா, அம்மா பார்க்குற பெண்ணு எனக்கு செட் ஆகுமானு தெரியல. நிச்சயமான நான் காதல் திருமணம் தான் செய்வேன். இப்போவும் காதலிச்சிக்கிட்டு தான் இருக்கேன். விரைவில் அந்த பொண்ணு யாருனு சொல்றேன் " என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement