• Sep 26 2023

நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது, ஆனால் காதல் திருமணம் இல்லை- சரத்குமார் பட நடிகை வெளியிட்ட அறிவிப்பு

stella / 1 week ago

Advertisement

Listen News!


மலையாள டிவி நடிகையாக இருந்த மீரா நந்தன், 2008ம் ஆண்டு முல்லா என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் வால்மீகி என்ற படத்தின் மூலம் அறிமுகமான மீரா நந்தன், அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூரிய நகரம், சண்டமாருதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


 இவர் சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகின்றார்.இது குறித்து அண்மையில் விமர்சனம் எழுந்த போது கூட துபாயில் வசிக்கும் நான் அப்படி தான் டிரெஸ் போடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தற்போது மீரா நந்தன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.லண்டனை சேர்ந்த ஸ்ரீஜு என்பவருடன் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. இது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தானாம்.


தற்போது மீரா நந்தனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement