• Jul 08 2024

‘இந்தியன் 2’ ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா? ஷங்கரின் முந்தைய படங்களை விட அதிகமா?

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’இந்தியன் 2 ’திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

’இந்தியன் 2 ’  திரைப்படம் சென்சார் ஆகி அது குறித்த சான்றிதழ் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் சரியாக 3 மணி நேரம் என தகவல் வெளியாகியுள்ளன.

சமீப காலமாக குறைந்த 3 மணி நேரத்திற்கும் குறைவான ரன்னிங் டைம் படங்கள் மட்டுமே வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் 3 மணி நேரம் பொறுமையாக ரசிகர்கள் உட்கார்ந்து படம் பார்ப்பார்களா? அந்த அளவுக்கு படத்தின் சுவாரஸ்யமான காட்சிகள் இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



ஆனால் அதே நேரத்தில் ஷங்கரின் முந்தைய படங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அல்லது அதைவிட அதிகமாக ரன்னிங் டைம் கொண்ட படங்களாக தான் இருந்திருக்கிறது. ஷங்கரின் முந்தைய படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல் இதோ:

இந்தியன் - 3 மணி நேரம் 5 நிமிடங்கள்

ஜீன்ஸ்  - 2 மணி நேரம் 52 நிமிடங்கள்

முதல்வன்  - 2 மணி நேரம் 44 நிமிடங்கள்

பாய்ஸ்  - 2 மணி நேரம் 50 நிமிடங்கள்

அந்நியன்  - 3 மணி நேரம் 1 நிமிடம்

நண்பன்  - 3 மணி நேரம் 8 நிமிடங்கள்

சிவாஜி  - 3 மணி நேரம் 5 நிமிடங்கள்

எந்திரன்  - 2 மணி நேரம் 50 நிமிடங்கள்

ஷங்கர் இயக்கிய ‘இந்தியன் 2’ திரைப்படமும் 3 மணி நேரம் என்று செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement