• Sep 26 2023

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு பக்கத்தில் தான் சிம்புவின் வீடா?- மீனா கூறிய சூப்பர் தகவல்- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அண்ணன் தம்பிகளுக்கிடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நிகழ்ச்சியானது 4 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.இந்த சீரியல் தற்பொழுது முடிவுக்கு வரப்போகவுள்ளதாகவும் தகவல் வெளியாகவுள்ளது.

மேலும் இப்போது குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் புதுவீட்டுக்கு போய் விட்டதோடு பிரிந்திருந்த குடும்பத்தினம் அனைவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டனர். அண்மையில் தான் புதிய வீட்டுக்குள் எல்லோரும் குடி புகுந்துள்ளனர். கண்ணனிடமிருந்து பறி போன அரசாங்க வேலை மீண்டும் கிடைத்து விட்டது.


அத்தோடு தனத்திற்கு கான்சர் நோய் என்பதும் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதனால் எல்லோரும் தனத்தினை விழுந்து விழுந்து கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோக்கள் எடுத்து யூடியூப் பக்கத்தில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா பதிவிடுவது வழக்கமான ஒரு விஷயம்.அண்மையில் இவர், இப்போது சென்றுள்ள புதிய வீடு ECRல் இருக்கிறது, ரொம்ப தூரம், தினமும் ஏதோ ஊரு விட்டு ஊரு போயிட்டு வர்ற மாதிரி இருக்கு. 


இது சிம்பு அம்மாவோட தங்கச்சி லொக்கேஷன், அவுங்களோட ஷூட்டிங் ஹவுஸ் தான் இதெல்லாம் சொன்னாங்க என்று ஹேமா வீடியோ வெளியிட அதனை ரசிகர்கள் அதிகம் பேர் பார்த்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.   


Advertisement

Advertisement

Advertisement