• Jan 19 2025

இன்று வெளியாக இருந்த ரஞ்சித் படம் கேன்சல்.. அரசியல்வாதிகள் மிரட்டல் காரணமா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கிய ’கவுண்டம்பாளையம்’ என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த படம் இன்று வெளியாகவில்லை என்றும் அரசியல்வாதிகள் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுகின்றனர் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஞ்சித் அவ்வப்போது நாடக காதல் குறித்து பரபரப்பாக பேட்டி அளித்து வரும் நிலையில் நாடகக் காதல் குறித்த கதை அம்சம் கொண்ட ’கவுண்டம்பாளையம்’ என்ற படத்தை அவர் நடித்து இயக்கி உள்ளார். இந்த படம் இன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு முன்பதிவுகளும் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அவர் திடீரென இன்று இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்று அறிவித்துள்ளார்.



நாடக காதல் குறித்த கதை அம்சம் கொண்டது என்பதால் சிலர் ’கவுண்டம்பாளையம்’ படத்தை வெளியிடக்கூடாது என மிரட்டுகின்றனர் என்றும் குறிப்பாக சில அரசியல்வாதிகள் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டியதால்தான் இன்று இந்த படம் வெளியிட முடியவில்லை என்றும் ரஞ்சித் கூறியுள்ளார்.

சென்சார் வாங்கிய ஒரு திரைப்படத்தை வெளியிட முடியவில்லை என்பது பெரும் சோதனை என்றும் விரைவில் தமிழக அரசின் அனுமதியுடன் இந்த படத்தை வெளியிடுவேன் என்றும் முன்பதிவு செய்த அனைவருக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ’கவுண்டம்பாளையம்’ படம் ரிலீஸை எதிர்த்து யாரும் மிரட்டவில்லை என்றும் இன்று வெளியாக இருந்த இந்த படத்திற்கு மிகவும் குறைவான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்திருந்ததால் ரஞ்சித் இந்த படத்தை வெளியிடும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement