• Jan 19 2025

கோடீஸ்வரி தமன்னாவுக்கு என்ன ஆச்சு? குடியிருக்கும் வீட்டை வங்கியில் அடமானம் வைத்தாரா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா ஒரு திரைப்படத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில், அவரது தந்தையும் வைர வியாபாரம் செய்யும் ஒரு கோடீஸ்வரர் என்ற நிலையில், அவர் தனது வீட்டை வங்கியில் அடமானம் வைத்திருப்பதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி வெப் தொடர்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. அவர் ஒரு படத்துக்கு 3 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் அதுமட்டுமின்றி சில பிசினஸ்களிலும் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நாயகியாக நடித்து வரும் தமன்னாவுக்கு பல கோடி சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென தமன்னா தனக்கு சொந்தமான மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை அரசு வங்கி ஒன்றில் அடமானம் வைத்து சுமார் 8 கோடி ரூபாய் பணம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மும்பையில் உள்ள முக்கிய பகுதியில் அலுவலகத்திற்காக லட்சக்கணக்கில் வாடகைக்கு ஒரு வீட்டை அவர் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமன்னா ஏன் தனது சொந்த வீட்டை அடமானம் வைத்து விட்டு வாடகை வீட்டில் அலுவலகத்தை மாற்றி உள்ளார் என்று தெரியவில்லை. அவரது மார்க்கெட்டும் தற்போது நல்ல முறையில் இருக்கும் நிலையில், அவரது நகை கடை, ரியல் எஸ்டேட் ஆகிய பிசினஸ்களும் லாபத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் எதற்காக வீட்டை அடமானம் வைத்து பணம் வாங்கி உள்ளார் என்பது இன்னும் புரியாத புதிராக இருப்பதாக திரையுலகினர் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement