• May 17 2025

ak மற்றும் அவரது குடும்பத்துடன் ஐபிஎல் பார்க்க சென்ற sk..!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் தனது ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பெற்றவர். சமீபத்தில் அஜித் தன் மனைவி ஷாலினி உடன் திருமண நாளை கொண்டாடியுள்ள நிலையில் அவர் தற்போது சென்னை ஐபிஎல் போட்டி பார்ப்பதற்காக சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளார். 


இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் அவருடன் இருந்தார் அவர் அஜித் அருகில் அமர்ந்து ஐபிஎல் போட்டியை ரசித்துக்கொண்டிருந்தார். அஜித் மற்றும் சிவகார்த்திகேயனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஐபிஎல் போட்டியில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் உற்சாகமாக போட்டியை பார்த்து கொண்டிருக்கின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவியுள்ளது. மேலும் அஜித் தனது மனைவி ஷாலினி மகன் மற்றும் மகளுடன் ஐபிஎல் போட்டியை பார்வையிட சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் தற்போது ஸ்ருதிகாசன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றில் அஜித் இடம்பெறுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவும் வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement