• May 08 2024

டான் படத்தில் 17 வயது மாணவனாக நடித்து அசத்திய சிவகார்த்திகேயன்- வெளியாகிய சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “டான்”.இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியங்கா மோகன் நடித்திருப்பதோடு எஸ். ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் படம் மே 13 அன்று வெளியாகவுள்ளது. இப்பொது, படத்தின் ப்ரோமோஷன் தொடங்கியுள்ளது. படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக் சமீபத்தில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயன் 17 வயது இளைஞராக நடிக்கிறார் என்ற ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் கல்லூரிக்கு செல்லும் இளைஞனாக இருப்பாராம். எஸ்.ஜே.சூர்யா நெகடிவ் கதாபாத்திரத்தில் கல்லூரி ஆசிரியராக நடிக்கிறாராம், மேலும் படத்தில் சூரி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலர் மாணவராக நடித்துள்ளனர்.

அந்த வகையில் , இப்படத்திற்கு அனிரூத் தனது பிளாக் பஸ்டர் இசையில் கலக்கியுள்ளார். இதற்கிடையில், ‘அயலான்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இப்படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement