• Apr 28 2024

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள வேழம் திரைப்படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் அசோக் செல்வன். வித்தியாசமாக கதைகளை தெரிந்தெடுத்து நடித்து வரும் இவரது நடிப்பில் தற்பொழுது வேழம் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை சந்தீப் ஷ்யாம் இயக்கியுள்ளதோடு அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்

தெகிடி படத்தின் வெற்றிக்கு பிறகு அசோக் செல்வன் மற்றும் ஜனனி இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் நடிகர் அஜய் முக்கிய கதாபாத்திரத்திலும் ராஜ கிருஷ்ணமூர்த்தி, சங்கிலி முருகன், பி.எல் தேனப்பன், மராத்தி நடிகர் மோகன் அகாஷே உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

ஜானு சந்தர் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். கே4 கிரியேஷன்ஸ் சார்பில் கேசவன் என்பவர் தயாரித்துள்ள இப்படத்தை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.

வழக்கமாக காதல் படங்களில் நடித்து வரும் அசோக் செல்வன்இந்த படத்தின் ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறவிருக்கிறார். இந்நிலையில் இப்படம் ஜூன் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement