• Sep 14 2024

கோலிவுட்டை எஸ்கேயிடம் ஒப்படைத்த தளபதி? இணையத்தில் லீக்கான சீன்! சும்மா தெறிக்குதே...

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்றைய தினம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் உச்சகட்ட வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு சீனையும் பயங்கரமாக என்ஜாய் செய்து பார்த்துள்ளார்கள் ரசிகர்கள். இப்படி ஒரு சம்பவத்தை வெங்கட் பிரபு செய்வார் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறி வருகின்றார்கள்.

வெங்கட் பிரபு இயக்கும் படம் என்றாலே கமர்சியல் ரூட் ஆக காணப்படும். அவரின் டெஸ்ட்க்கும் அவர் அமைக்கும் ஸ்க்ரீன் ப்ளேவுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் காணப்படுகிறது. 

மங்காத்தா, பிரியாணி ஆகிய படங்களில் அவர் வைத்த ட்விஸ்ட் எல்லாம் ட்ரேட் மார்க் என்று ரசிகர்கள் கூறுவார்கள். அப்படிப்பட்ட இயக்குனரின் இயக்கத்தில் தான் தற்போது விஜய் முதன் முதலாக கோட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மங்காத்தாவை விட ஆயிரம் மடங்கு  கோட் படம் உள்ளதாக தமது விமர்சனங்களை முன்வைத்து வந்தார்கள்.. இந்த படம் தளபதி விஜய்க்கும் தரமான கம்பேக் என்று சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே கமெண்ட்ஸ்களை பார்க்க முடிகின்றது.


இந்தப் படத்தில் எகப்பட்ட சப்ரைஸ்கள் காணப்படுகின்றது. ஆரம்பத்திலேயே சிவகார்த்திகேயன் கேமியா செய்கின்றார், திரிஷா நடனம் ஆடுகின்றார் என்று கூறப்பட்டது. அந்த காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்பரித்துள்ளார்கள்.

இந்த நிலையில், தற்போது இன்றைய தினம் வெளியான கோட் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் காட்சிகளை வெளியிட்டுள்ள நிலையில்  விஜயுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் சீனையும் வெளியிட்டுள்ளார்கள்.  குறித்த வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகின


மேலும் அந்த காட்சியில் விஜய் சிவகார்த்திகேயனிடம் வில்லனை ஒப்படைத்துவிட்டு அதைவிட பெரிய சம்பவம் செய்வதற்காக கிளம்புகின்றார். இதன் போது சிவகார்த்திகேயன் நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன் நீங்க அதைவிட முக்கியமான விஷயத்துக்கு செல்கின்றீர்கள் அதை கவனியுங்கள் என்று சொல்கிறார்.

இதனால் இணையவாசிகள் விஜய் தனக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் தான் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கின்றாரா? அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தானா என்று இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement