• Jan 19 2025

மோகன்லால் மீது சுமத்தப்படுவது வீண் பழி... கொந்தளித்து உண்மையை உடைத்த பிரபல நடிகை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பே அறிக்கையை தாக்கல் செய்த ஹேமா கமிட்டி அந்த அறிக்கையில் குறிப்பிட்ட நடிகர்களின் பெயரை வெளியிடாமல் இருந்தது.

ஆனாலும் அது எப்படியோ தற்போது லீக் ஆகி ஒவ்வொருவரின் பெயரும் வெளியாகக் கொண்டு உள்ளன. இந்த புகாரினால் சிக்கிய  பல முக்கிய நடிகர்கள் அம்மா சங்கத்திலிருந்து பதவியை ராஜினாமா செய்திருந்தார்கள். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

ஹேமா கமிட்டி மீது ஒரு நம்பிக்கை வைத்து பல நடிகைகள் தமது புகார்களை அழித்தவாறே உள்ளன. அந்த நடிகர்களின் பெயரில் முதலாவதாக காணப்படுபவர் மோகன்லால் என்றும் சொல்லப்படுகிறது. அவருடைய பெயர் தான் அடிக்கடி அடிபடுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பில் பிரபல நடிகை ஷர்மிளா ஒரு பேட்டில் கூறுகையில், குறித்த அறிக்கையில் மோகன்லாலின் பெயர் வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை எனக் கூறியுள்ளார்.


இது ஒரு பெரிய பூகம்பத்தையே குழப்பி உள்ளது. இதுவரை பல நடிகைகள் மோகன்லால் பெயரை குறிப்பிட்டு வந்த நிலையில், ஷர்மிளா மட்டும் அவர் அப்படிப்பட்டவர் இல்லை என கூறுவது ஆச்சரியமாக காணப்படுகின்றது.

அதற்கு காரணம் அந்த புகாரில் சிக்கியுள்ள நடிகர்கள் அனைவருடனும் ஷர்மிளா நடித்துள்ளாராம். ஆனால் அவர் நடிக்கும் போது இந்த மாதிரி சம்பவம் எதுவுமே தனக்கு நடக்கவில்லை எனக்கூறி உள்ளார்.

அதிலும் தான் முதன் முதலில் மலையாளத்தில் நடிக்கும் போது தனக்கு மலையாளமே தெரியாது. அதனால் மோகன்லால் மற்றும் இரு நடிகர்கள் தான் தனக்கு அருகே வந்து தமிழ் தெரியும் அதனால் நீ கவலைப்படாதே நாங்கள் உன்னிடம் தமிழிலேயே பேசுகின்றோம் என தைரியம் கொடுத்ததாகவும்   ஷர்மிளா கூறியுள்ளார்.


அதே மாதிரி இன்னொரு படத்தில் நடிக்கும் போது அது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்த கொண்ட சமயமாம். அப்போது ஷர்மிளா புத்தகத்தையும் கொண்டு வந்து விடுவாராம். இதனால் மோகன் லால் வசனத்தை பிறகு படிக்கலாம், இப்போது தேர்வுக்கு முதலில் படி நான் கேள்வி கேட்கின்றேன் நீ பதில் சொல்ல வேண்டும் என அவரை அருகிலேயே இருந்து படிக்க வைப்பாராம். இப்படிப்பட்டவர் இந்த புகாரில் சிக்கி இருப்பது தன்னால் நம்பவே முடியவில்லை அவர் அப்படிப்பட்டவரும் கிடையாது என ஷர்மிளா கூறியுள்ளார்.

மேலும் அவர் ஒரு ஹீரோ, அழகானவர், எத்தனையோ  ஹீரோயின்களுக்கு அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அவரை திருமணம் செய்யவும் அவருடன் நெருங்கி பழகவும் ஆசைதான். அவை எல்லாம் கிடைக்கவில்லை என்ற ஒரு ஆதங்கத்தினால் கூட மோகன்லால் மீது இப்படி ஒரு பழி வந்திருக்கலாம் என ஷர்மிளா கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement