• Sep 14 2024

பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பிளந்து கட்டும் கோட் படம்..! முதல் நாள் கணிப்பே இத்தனை கோடியா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு வருகின்றது. வெங்கட் பிரபுவின் படம் என்றாலே கலகலப்புக்கு, திருப்பங்களுக்கு பஞ்சம் இருக்காது. அத்துடன் விஜய் உடன் வெங்கட் பிரபு கூட்டணி அமைத்து இருப்பது படம் மீதான எக்கச்சக்க எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இன்றைய தினம் ரிலீசான கோட் படத்திற்கு ப்ரீ புக்கிங்கிலேயே படத்தின் டிக்கெட் விற்பனை மாஸாக காணப்பட்டது. மேலும் முதல் நாள் காட்சியை பார்ப்பதற்காக சென்ற ரசிகர்கள் தியேட்டரை திருவிழா போல ஏகப்பட்ட அபிஷேகங்களை செய்து பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார்கள்.

சாதாரணமாகவே விஜயின் படம் வெளி ஆகிறது என்றால் முதல் நாள் பண்டிகை போல தான் காணப்படும். அது போலவே தற்போது கோட் படமும் அதனை நிரூபித்துள்ளது.


மேலும் வெங்கட் பிரபு விஜய்யை வைத்து எந்த மாதிரியான சம்பவம் செய்யப் போகின்றார் என்றும், இந்த படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன், அஜித், விஜயகாந்த் என ஏகப்பட்ட நடிகர்கள் என்ட்ரி ஆவதால் இதனை ஆவலுடன் படம் பார்க்க சென்ற ரசிகருக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு.

இந்த நிலையில், கோட் படம் விமர்சன ரீதியாக பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிவரும் நிலையில், வசூல் ரீதியாகவும் பந்தயம் அடிக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி முதல் நாளான இன்றைய தினம் இந்த படம் சுமார் 120 கோடி வரை வசூலித்து விடும் என்று திரைத் துறையினர் கணித்துள்ளார்கள். மேலும் வெளிநாடுகளில் இந்திய மதிப்பில்  சுமார் 33 கோடி வரை வசூலாகி இருப்பதாக தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement